தமிழ்நாடு

நீர்வளத்துறை திட்டப் பொறியாளர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகளை வழங்கினார் முதலமைச்சர்!

Tamil Selvi Selvakumar

நீர்வளத்துறை திட்ட உருவாக்க பொறியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜி.பி.எஸ். கருவிகளை வழங்கினார். 

நீர் வளத்துறை சார்பில், நீர்வளத்துறை திட்ட உருவாக்க பொறியாளர்களுக்கு டி.ஜி.பி.எஸ். கருவிகள் மற்றும் 214 கையடக்க ஜி.பி.எஸ். கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, நீர்வளத்துறை திட்ட உருவாக்க பொறியாளர்களுக்கு டி.ஜி.பி.எஸ். மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை வழங்கினார். இதில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு வன உயிரின குற்றக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இலச்சினையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாட்டில் காடுகள் மற்றும் காட்டுயிர்கள் தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் வகையில், புதிய பிரிவை தொடங்கி வைத்த முதலமைச்சர் அதன் இலச்சினையையும், யானைகள் எண்ணிக்கை கணக்கீடு அறிக்கையையும் வெளியிட்டார். அத்துடன்,  வன உயிரின குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, கட்டணமில்லா வாட்ஸ்அப் எண் மற்றும் இணையதள சேவையையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.