நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மஞ்சள் நிற பேருந்து...வருகிற 11 ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!

நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மஞ்சள் நிற பேருந்து...வருகிற 11 ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!

மஞ்சள் நிறம் தீட்டப்பட்டு நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள 100 பேருந்துகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 11ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் 8 கோட்டங்களில் பேருந்துகளை இயக்கி வருகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகமானது நீண்ட தூர பேருந்துகளை இயக்கி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயங்கி வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் பச்சை நிறத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் பின், பி.எஸ்., 4 ரக பேருந்து வருகையால், நீல நிறம் மாற்றப்பட்டது.

தற்போது, அதிகளவில் நீல நிற பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன. இலவச பேருந்து என அடையாளம் காண முன், பின் பாதி, பிங்க் நிறத்தில் டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் பயன்படுத்த, 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும், ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படிக்க : ஓடி வந்து கை கொடுத்த ரசிகருக்கு ஷாக் கொடுத்த தமன்னா...மில்க் பியூட்டியின் செயலை பாராட்டும் நெட்டிசன்கள்!

தமிழகம் முழுவதும் உள்ள எட்டு கோட்டங்களில் சேதமடைந்த பேருந்துகள் சீரமைக்கப்பட உள்ளன. அதன் ஒரு பகுதியாக, பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்பட உள்ளது. தமிழக அரசு போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கும் நோக்கத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தற்போது 1000 புதிய பேருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான டெண்டர் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருக்கைகள், ஜன்னல்கள் மற்றும் கம்பிகள் ஆகியவை சேதமடைந்த பழைய பேருந்துகளை சரி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 
தற்போது சீரமைக்கப்பட்டு வரும் பேருந்துகளில் பழைய வண்ணம் மாற்றம் செய்யப்பட்டு புதிய நிறத்தையும் அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கி வரும் பேருந்துகளில் நீளம், பச்சை மற்றும் பிங்க் உள்ளிட்ட நிறங்கள் அடிக்கப்பட்டுள்ள நிலையில் அதனால் சீரமைக்கப்படும் பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு வருகிறது.

எனவே இனி தமிழகத்தில் அரசு பேருந்துகள் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட உள்ளது. நிறம் மட்டுமின்றி, பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவை விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்து இயக்கத்தினை வரும் 11ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். சென்னை, பெங்களூரு, திருச்சி, கரூரில் புதிய பேருந்துகள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது