தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவசர பயணமாக டெல்லி புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் நீண்ட நாட்களாக கிடப்பில் வைத்திருந்ததால் தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிக்க : "18 வயதானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன்வர வேண்டும்" - சத்யபிரத சாஹூ
இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், 10 மசோதாக்களையும் ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனையடுத்து, நேற்று சட்டப் பேரவை கூடிய நிலையில் அனைத்து மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் செல்லும் ஆளுநர் உள்துறை அமைச்சர் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.