"18 வயதானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன்வர வேண்டும்" - சத்யபிரத சாஹூ

18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்வர வேண்டும் என தமிழ்நாடு மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ கூறியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத்திருத்தம் தொடர்பாக  மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.  

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்ய பிரதசாஹூ, வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்ற வேண்டும் என வலியுறுத்தினார். தமிழ்நாடு எப்போதும் அமைதியான மாநிலம் என்பதால் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்வர வேண்டும் எனவும் கூறினார்.