தமிழ்நாடு

எதிர்கட்சிகளை முடக்கவே பொய் வழக்கு தொடுக்கப்படுகின்றன - செங்கோட்டையன் குற்றச்சாட்டு!

Tamil Selvi Selvakumar

எதிர்கட்சிகளை முடக்க வேண்டும் என்பதற்காகவே திமுக அரசு பொய் வழக்குகளை தொடுத்து வருவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டி உள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அடுத்துள்ள வரப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் 5-வது நீரேற்று நிலையத்தில் சோதனை ஓட்டத்தை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மதுரை விமான நிலையத்தில் விமர்சித்து பேசி முகநூலில் பதிவிட்ட சக பயனாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை திமுக அரசு காவல்துறைக்கு உள்ளது. ஆனால், தமிழக அரசு காவல்துறை அதனை செய்யவில்லை சாடினார்.

முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு கொடுக்காதது திமுக அரசின் மெத்தனபோக்கு என்று கூறியவர், திமுக அரசு இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக கூறினார். மேலும், எதிர்கட்சியயை நசுக்க வேண்டும் என்பதற்காகவே திமுக அரசு இது போன்ற பொய் வழக்குகளை போட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக - பா.ஜ.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.