தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஈபிஎஸ் போட்ட முதல் கையெழுத்து...!

Tamil Selvi Selvakumar

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான ஓபிஎஸ் மனுக்களை தள்ளுபடி செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பையடுத்து, அதிமுக தலைமையகம் வந்த இபிஎஸ்-க்கு அவரது ஆதரவாளர்கள் பூங்கொத்து கொடுத்தும், கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையாளர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வெற்றி சான்றிதழை வழங்கினர்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, அனைத்து தொண்டர்களாலும் தாம் ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார். அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். 

தொடர்ந்து, பொதுச்செயலாராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்ற அவரது முதல் கோப்புகளில் கையெழுத்திட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.