தமிழ்நாடு

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போதைப்பொருள் விழிப்புணர்வு!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது. 

போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூாி மாணவா்கள் மற்றும் காவல்துறையினா் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். 

அதன் ஒருபகுதியாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தனியாா் கல்லூரியில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மனிதச் சங்கிலி பேரணி நடைபெற்றது. இதில் தேவகோட்டை துணை காவல் கண்காணிப்பாளா் பார்த்திபன் பங்கேற்று போதைப் பொருட்களால் உடலுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து எடுத்துரைத்தாா். தொடா்ந்து மாணவா்கள் பேரணியாக சென்றனா். 

இதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கனதீஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அப்போது மாணவா்கள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய படி ஊர்வலமாக சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் பங்கேற்று மாணவர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடா்ந்து அனைவரும் போதைப் பொருள் தடுப்பு உறுதி மொழி எடுத்து கொண்டனா்.

இதேபோல் சேலம் மாநகர காவல்துறை மற்றும் தனியார் கல்லூரி சார்பில் சர்வதேச போதை பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் பொய்க்கால் குதிரை மற்றும் தாரை தப்பட்டை அடித்து நடனமாடி போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் தத்ரூபமான நடித்து காட்டினா். தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

திருப்பூா் மாவட்டம் காங்கேயம் காவல்துறை சார்பில், தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை காவல் ஆய்வாளர்  காமராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் பங்கேற்று போதைப்பொருள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊா்வலமாக  சென்றனர்.