சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் மீது கற்கள், பாட்டில் வீசி ஆதி தமிழர் பேரவையின் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயநகர பேரரசு ஆட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள இங்கு வந்தவர்கள் தான் அருந்ததியர்கள் என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அருந்ததியர் அமைப்பினை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : விழிப்புணர்வுக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த North Indians...!
அந்தவகையில், சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை ஆதித்தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் இரு தரப்பினரும் மாறி மாறி கற்கள் மற்றும் பாட்டிலை வீசி தாக்கிக் கொண்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் கைது செய்தனர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்து வருகிறது. இதற்கிடையில், ஆர்ப்பாட்டத்தால் நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தின் கண்ணாடி சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.