தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று அம்பத்தூரில் தனியார் மண்டபத்தில் சென்னை மேற்கு மண்டலம் சார்பாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
பாஜக மாநில துணைத் தலைவர் துரைசாமி தலைமை தாங்கிய இந்த விழாவில் பாஜக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | காவலர்களால் சுட்டு தள்ளப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர்...
அப்பொழுது மாவட்ட துணை தலைவர் பிரகாஷ் என்பவர் கூட்டத்தில் தீர்மானங்களை வாசிக்க முயன்ற பொழுது சபை நாகரிகம் இல்லாமல் மதுரவாயில் மேற்கு மண்டல தலைவர் DTP கிருஷ்ணா, “எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்று கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து மதுரவாயில் மேற்கு மண்டல தலைவர் கிருஷ்ணா பேச முற்பட்டபோது எதிரே இருந்த நிர்வாகிகள் ஐந்து பேர் கிருஷ்ணாவை சாரமாறியாக தாக்கியுள்ளனர்.
இதில் முகம் மற்றும் பல் கை ஆகிய இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் வீடு திரும்பியதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. பாஜக செயற்குழு கூட்டத்தில் மண்டல தலைவர் கிருஷ்ணா தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.