தமிழ்நாடு

அமித்ஷா பெயரை ஏன் நீக்க வேண்டும்...அவரின் பெயர் என்ன தகாதா வார்த்தையா? மு.க.ஸ்டாலின் பதிலடி!

Tamil Selvi Selvakumar

அமித்ஷா பெயரை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

இரண்டு தினங்களுக்கு முன்பு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, ஐ.பி.எல். நடத்துவதே, மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன்தான் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க. உறுப்பினர்கள் அமித்ஷா பெயரை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  மரியாதை குறைவாக அமித்ஷாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும், தவறான வார்த்தைகள் அதில் இடம் பெறவில்லை, எதற்கு அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும், மத்திய அமைச்சரின் பெயர் என்ன தகாத வார்த்தையா என்றும் கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் காரசார விவாதம் ஏற்பட்டது. பின்னர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.