தமிழ்நாடு

தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்...!

Tamil Selvi Selvakumar

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடுத்தடுத்து சிறைபிடித்திருப்பது, தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்று தனுஷ்கோடி தலைமன்னார் இடையே தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 3 விசைப்படகுகளையும், அதிலிருந்த 23 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 2 விசைப்படகுகளையும், அதிலிருந்த 14 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததால், பதற்றமான சூழல் நிலவியது.

அடுத்தடுத்து, 5 விசைப்படகுகள் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது, தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.