தமிழ்நாடு

சட்டசபை கூட்டம்.... இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் பங்கேற்பனரா?!!!

Malaimurasu Seithigal TV

2023-ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தொடங்குகிறது. 

ஆளுநர் உரையுடன்:

காலை  10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார்.  ஆளுநர் உரையில், மக்கள் நலத்திட்டங்களின் நிலை, அவற்றை அரசு செயல்படுத்தும் விதம், அரசின் புதிய கொள்கைகள், புதிய திட்டங்கள் குறித்து இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.  ஆளுநர் உரை முடிந்ததும், சட்டமன்ற  மரபுபடி அவர் வழியனுப்பி வைக்கப்படுவார்.  

இரங்கல்:

இதனை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவு உட்பட முன்னாள் உறுப்பினர்களின்  மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவையின் அன்றைய நிகழ்ச்சி  நடவடிக்கை ஒத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுகுழு கூட்டம்:

பின்னர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்படவுள்ளது. 

இதனிடையே, ஆளுநர் ஆர். என். ரவி சட்டசபையில் உரை நிகழ்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் இன்றைய கூட்டத்ததை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இபிஎஸ் ஆதரவு?:

எடப்பாடி பழனிச்சாமி துணை தலைவராக நியமித்த உதயகுமாருக்கு இருக்கை ஓதுக்க சபாநாயகர் அனுமதி மறுத்தத்தை கண்டித்து இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்பார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

-நப்பசலையார்