பொங்கல் தொகுப்பு எப்போது.... ஒருநாள் எத்தனை டோக்கன்!!!

பொங்கல் தொகுப்பு எப்போது.... ஒருநாள் எத்தனை டோக்கன்!!!

அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 

என்னென்ன?:

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் அரிசி பெறும் 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு அளிக்கப்படவுள்ளது.  இந்தத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையுடன் முழு நீளக் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

கரும்பு கொள்முதல்:

அரிசி, சா்க்கரை ஆகியவை நியாயவிலைக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், முழுநீளக் கரும்பை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  17 மாவட்டங்களில் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு, நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. 

எங்கே?:

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறாா்.  இதைத் தொடா்ந்து, மற்ற மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளது. 

ஒருநாளைக்கு:

பொங்கல் டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்தின் அடிப்படையில் நாளொன்றுக்கு சுமாா் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு வரும் 13-ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   இந்தியா-வங்காளதேச நட்பு பைப்லைன் விரைவில் திறப்பு....முழு விவரம் சுருக்கமாக!!!