விரைவில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கலைஞர் கூட்டரங்கு அமைக்கப்படும் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.
சென்னை பனையூரில் நடைபெற இருந்த 'இசையமைப்பாளா் ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி மழைக்காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் அவரது ட்விட்டா் பதிவில், அரசாங்கத்தின் உதவியுடன் சென்னையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக உலகத்தரம் வாய்ந்த நவீன உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என நம்புவதாக குறிப்பிட்டிருந்தாா்.
இதையும் படிக்க : ”மாணவர்களிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல” முதலமைச்சர்!
அதனை மேற்கோள் காட்டி ட்விட்டாில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநாடு, கண்காட்சிகள் உள்ளிட்டவை நடத்தும் வகையில் விரைவில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கலைஞர் கூட்டரங்கு அமைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளாா்.