”மாணவர்களிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல” முதலமைச்சர்!

”மாணவர்களிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல” முதலமைச்சர்!
Published on
Updated on
1 min read

மாணவர்களிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளார். 

நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக 12ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 3 சிறார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  பள்ளி - கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல என தெரிவித்துள்ளார்.  இந்தச் சூழ்நிலையை மாற்றிடத் தேவையான பரிந்துரைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

மேலும் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூகச் சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என அனைவரும், தங்களது கருத்துகளை நீதியரசர் சந்துருவிடம் தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com