தமிழ்நாடு

அளவுக்கு அதிகமான சத்து மாத்திரை...உயிரை விட்ட மாணவி...உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் பேட்டி!

Tamil Selvi Selvakumar

ஊட்டி மாணவியின் உயிரிழப்புக்கு காரணமான செவிலியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், வள்ளுவம்பாக்கம் பகுதியில் 78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு புதிய துணை சுகாதார நிலையத்தினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊட்டியில் அளவுக்கு அதிகமான சத்து மாத்திரைகளை உட்கொண்டு  உயிரிழந்த  மாணவியின் விவகாரத்தில் இரண்டு செவிலியர் மற்றும் உயர் அதிகாரிகள் மீது தற்காலிக பணியிடை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக, சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.