கடந்தாண்டு செப்டம்பர் முதல் தற்போது வரை: 25 லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் - ராதாகிருஷ்ணன் தகவல்!

கடந்தாண்டு செப்டம்பர் முதல் தற்போது வரை: 25 லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் - ராதாகிருஷ்ணன் தகவல்!
Published on
Updated on
1 min read

கடந்தாண்டு செப்டம்பர் முதல் தற்போது வரை 25 லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணாநகர் நுகர்ப்பொருள் வாணிபக் கழக கிடங்கில் உள்ள பொருட்களின் கையிருப்பு குறித்து, கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகளுக்கு எந்த குறையும் நேராமல் இருக்க முதலமைச்சர் முயற்சி மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன், கடந்தாண்டு செப்டம்பர் முதல் தற்போது வரை 2,866 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 25 லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதன்மூலம், கடந்த ஆண்டை காட்டிலும் 2 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாகவும்,  3.27 லட்சம் விவசாயிகளுக்கு 5 ஆயிரத்து 104 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

அதுமட்டுமல்லாமல், கூட்டுறவு வங்கிகள் மூலம் 16.4 லட்சம் நபர்களுக்கு 12,671 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், கால்நடைத்துறை மூலம் 2.63 லட்சம் நபர்களுக்கு 1,808 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணவசூல் புகார் தொடர்பாக 9 சிறப்பு குழுக்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,  விவசாயிகளிடம் விதிமீறி பணம் வசூலித்த 90 பணியாளர்கள் நிரந்தரமாகவும் ,  19 பணியாளர்க்ள தற்காலிகவும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

அதேபோன்று, தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான 21 மாடர்ன் ரைஸ் மில்களும் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது,  அதனால் தொழிலாளர்கள் அச்சபட தேவையில்லை என்று உறுதியளித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com