தமிழ்நாடு

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு...யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு!

Tamil Selvi Selvakumar

தூத்துக்குடி  ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  

2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அ.குமரெட்டியபுரம், தாளமுத்துநகர், லயன்ஸ்டவுன், பாத்திமா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்ட 13 பேரின் உருவப்படங்களுக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

தொடர்ந்து, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், சம்பத்திற்கு  காரணமான யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என  ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டினர். 

மேலும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்றும், ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிட்ட படி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.