நாளை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்!

நாளை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்!

Published on

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் நாளை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தை வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் வகையில் தொடர் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 2024 -ம் ஆண்டு ஜனவாி மாதம் 11 மற்றும் 12-ம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், அதிக முதலீடுகளை ஈர்ப்பதுடன், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பல திட்டங்களை செயல்படுத்த வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றார். அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பின் மூலம் 9700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.2600 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

இதன் அடுத்தக்கட்டமாக தான், நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் தொழில்துறை அமைச்சா் டிஆா்பி ராஜா சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூா் புறப்பட்டு சென்றாா் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com