தமிழ்நாடு

பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு, 10 சதவீதம் போனஸ் அறிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில்,  வருகின்ற 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு 10 சதவீதம் போனஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணியில், போக்குவரத்துதுறை, மின்வாரியம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு ஆலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்க உத்த அதன்படி, சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு, 8 புள்ளி 33 சதவீதம் போனஸ் மற்றும் 1 புள்ளி 67 சதவீதம் கருணை தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு, 10 சதவீதம் போனஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும்  டி. பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8 புள்ளி 33 சதவீதம் போனசும், 1 புள்ளி 67 சதவீதம் கருணைத் தொகையும் சேர்த்து, 10 சதவீதம்வரை போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளது.