தீபாவளிக்கு போனஸ்.. முகேஷ் அம்பானி அறிவித்த சலுகை.. எந்தெந்த மாநிலங்களுக்கு தெரியுமா?

2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவையை வழங்க திட்டம் - முகேஷ் அம்பானி..!

தீபாவளிக்கு போனஸ்.. முகேஷ் அம்பானி அறிவித்த சலுகை.. எந்தெந்த மாநிலங்களுக்கு தெரியுமா?

தீபாவளி முதல் 5ஜி சேவை: இந்தியாவில் எப்போது 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வரும் என்ற ஆவல் அதிகரித்து காணப்பட்ட நிலையில், ஜியோ நிறுவனம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தீபாவளி முதல் 4 பெரிய நகரங்களில் 5ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

4 நகரங்களில் அறிமுகம்: இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45-வது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். 

10 மடங்கு வேகம்: 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவையை வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 4ஜி சேவையை காட்டிலும் 5ஜி இணைய சேவை மூலம் 10 மடங்கு வேகத்தில் தரவுகளை விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.