இந்தியா

நீட்டிக்கப்படுமா ஜே.பி.நட்டாவின் தலைமை பதவி......

Malaimurasu Seithigal TV

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.  

ஏற்றுமதி:

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தின் இரண்டாவது நாளில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கோவிட் தடுப்பூசிகளை இந்தியா வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.  2014ல் 10வது இடத்தில் இருந்த இந்தியாவின் பொருளாதாரம், தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  

தன்னிறைவு இந்தியா:

கோவிட் தொற்றுநோயின் போது, ​​மக்கள் யாரும் பட்டினியால் வாடாமல் இருக்கும் படியாக உணவு தானியங்களை விநியோகித்தோம் எனவும் பயனாளிகளுக்கு ரூ.22.6 லட்சம் கோடி நேரடி பலன் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.  நமது பொருளாதாரக் கொள்கையால், இந்தியா வலுவாகவும், தன்னிறைவு பெற்றதாகவும் மாறியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜேபி நட்டாவின் பதவிக்காலம்:

பாஜக தலைவர் ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.  இந்த சூழ்நிலையில் ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படலாம் என்ற விவாதம் பாஜகவினரிடையே எழுந்துள்ளது.  அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில், புதிய தலைவரிடம் தேர்தல் பொறுப்பை ஒப்படைப்பதற்கு பதிலாக, ஜேபி நட்டாவின் பதவிக்காலத்தை பாஜக நீட்டிக்கவே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

-நப்பசலையார்