எம்.ஜி.ஆா் தேசிய தலைவரா? திராவிட தலைவரா?...தமிழிசை சொன்ன பதில் என்ன?

எம்.ஜி.ஆா் தேசிய தலைவரா? திராவிட தலைவரா?...தமிழிசை சொன்ன பதில் என்ன?

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தொிவித்துள்ளாா்.

மரியாதை செலுத்திய தமிழிசை :

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆாின் 106-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தனது கணவருடன் வந்து மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா்.

தேசிய தலைவரா? அல்லது திராவிட தலைவரா?:

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், எம்.ஜி.ஆர் தேசிய தலைவரா? அல்லது திராவிட தலைவரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், எம்.ஜி. ஆா் தேசியம் போற்றிய திராவிட தலைவா் என கூறினாா். 

இதையும் படிக்க : திமுகவை வீழ்த்த அதிமுக ஒருங்கிணைய வேண்டும்...விரைவில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் யை சந்திப்பேன்!

தனிப்பட்ட கருத்து :

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும், ஆனால் இந்த கருத்தை ஒரு ஆளுநராக சொல்லவில்லை எனவும் கூறினார்.