இந்தியா

அப்சல்கானின் கல்லறையை சுற்றியுள்ள கட்டிடங்கள் இடித்த வழக்கு நாளை விசாரணை!!!

Malaimurasu Seithigal TV

மகாராஷ்டிர மாநிலத்தின் சதாரா மாவட்ட ஆட்சியர் ருசேஷ் ஜெய்வன்ஷி, "அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களை" இடிக்க ஒரு வாரத்திற்கு முன்பு மாநில அரசு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள்:

மகாராஷ்டிராவில் உள்ள சதாரா மாவட்ட நிர்வாகம், பீஜப்பூரின் அடில் ஷாஹி வம்சத்தின் தளபதியான அப்சல் கானின் கல்லறையைச் சுற்றியுள்ள "அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களை" வியாழக்கிழமை இடிக்கத் தொடங்கியது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பல ஆண்டு கோரிக்கை:

அப்சல்கானின் கல்லறையை இடிப்பதற்கான கோரிக்கை பல ஆண்டுகளாக மக்களிடமிருந்து தொடர்ந்து அரசுக்கு வைக்கப்பட்டு வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற விசாரணை:

மகாராஷ்டிராவில் உள்ள அடில் ஷாஹி வம்சத்தின் தளபதி அப்சல் கானின் கல்லறையைச் சுற்றியுள்ள கட்டிடங்களை இடிக்கும் தற்போதைய செயல்முறையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் வழக்கை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

யார் அந்த அப்சல்கான்:

அஃப்சல் கான் இந்தியாவின் தக்காணப் பீடபூமியில் உள்ள பிஜப்பூர் சுல்தான் அடில் ஷாவின் படைதளபதியாக விளங்கியவர்.  தக்காண சுல்தான்கள், விஜயநகரப்பேரரசை வெற்றி கொள்வதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் அப்சல் கான்.  பிஜப்பூர் சுல்தானத்தின் சிற்றரசராக இருந்த சிவாஜி புனே பகுதிகளை அவரது ஆட்சி பகுதியுடன் இணைத்து ஆளத் தொடங்கியிருந்தார்.

எனவே சிவாஜியை அடக்குவதற்கு, பிஜப்பூர் சுல்தான் அப்சால் கானை அனுப்பி வைத்தார்.  சிவாஜியுடன் அமைதி உடன்படிக்கை மேற்கொள்ள வந்த அப்சால் கானை, சிவாஜி பிரதாப்காட் சண்டையில் கொன்றார்.

இதே நாளில்..:

அப்சல்கானின் கல்லறையை சுற்றியுள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்ட இன்றைய தினமே சிவாஜி அப்சல்கானை தந்திரமாக கொன்றார்.

-நப்பசலையார்