விசா பெறுவதில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா?!!

கோடையில் அமெரிக்கா விசாவை பெறுவதில் சீனாவை இந்தியா முந்தி விடும் என அமெரிக்க மூத்த அதிகாரி தகவல்.

விசா பெறுவதில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா?!!

அமெரிக்கா விசாவை பெறுவதில் அதிக நாடுகளின் மக்கள் அதிகளவில் முனைப்பு காட்டுவது இயல்பான ஒன்று.  அது கல்வி விசாவாகவும் இருக்கலாம் அல்லது சுற்றுலா விசாவாகவும் இருக்கலாம் அல்லது வேலைக்கான விசாவாகவும் இருக்கலாம்.  இது போன்ற விசாக்களை பெறுவதில் சீனா எப்போதும் இந்தியாவை விட முன்னிலை வைக்கும்.

ஆனால் தற்போது வெளியான தகவலின் படி 2023ம் ஆண்டில் அமெரிக்கா விசா பெறுவதில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளிவிடும்  என தெரிகிறது.  மேலும் அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்குவதில் மெக்சிகோ முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   மாலத்தீவின் தலைநகரில் தீ விபத்து...9 இந்தியர்கள் உட்பட 10 பேர் மரணம்...