மாலத்தீவின் தலைநகரில் தீ விபத்து...9 இந்தியர்கள் உட்பட 10 பேர் மரணம்...

மாலத்தீவின் தலைநகரான மாலியில் உள்ள கட்டிடம் ஒன்றில் பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இதில் இந்தியர்கள் உட்பட 10 பேர் இறந்துள்ளனர்.

மாலத்தீவின் தலைநகரில் தீ விபத்து...9 இந்தியர்கள் உட்பட 10 பேர் மரணம்...

மாலியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  மாலத்தீவின் தலைநகர் மாலியில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த இடங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

உயர்மாடி கட்டடத்தின் தரைத்தளத்தில் அமைந்திருந்த வாகனங்கள் பழுது பார்க்கும் கேரஜில் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் பல வாகனங்களில் விரைந்து சென்று 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் கட்டடத்தின் மேல் தளத்தில் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.  விசாரணையில் அவர்களில் 9 பேர் இந்தியர்கள் எனவும் ஒருவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

விபத்திற்கான முழுமையான காரணம் இன்னும் அறியப்படவில்லை எனவும் விசாரனை நடைபெற்று வருவதாகவும் காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    இட ஒதுக்கீடு வேண்டி வழக்கு...விளக்கமளித்த மத்திய அரசு!!