மாநிலத்தின் 6க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடன் பிரச்னைகளை சாதிப் பஞ்சாயத்துகள் அணுகுவதாக கூறப்படுகிறது. அப்போது கடனை அடைக்க முடியாத குடும்பத்தைச் சேர்ந்த 8 முதல் 18 வயதுடைய சிறுமிகள் முத்திரைத் தாளில் வைத்து விற்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.
மேலும் படிக்க | ராஜஸ்தானில் முத்திரைத் தாள் மூலம் சிறுமிகள் ஏலம்...பாஜக ஆட்சியில் தான் நடந்தது? - அசோக் கெலாட் குற்றச்சாட்டு!
இதற்கு ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் சிறுமிகளின் தாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக பில்வாரா மாவட்டத்தில் இது கண்டறியப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க ராஜஸ்தான் அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், நடவடிக்கை கோரி முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு டெல்லி மகளிர் ஆணையத்தலைவர் ஸ்வாதி மாலிவால் கடிதம் எழுதியுள்ளார். அதில் சில ஆண்டுகளுக்கு முன் பாடல்கள் பாடவும் நடனமாடவும் பெண்கள் விற்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட சமுதாயத்தினரைப் பழிவாங்கவே இது நடைபெற்றதாகவும் சில கிராமத்தினர் தெரிவித்ததை சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் படிக்க | முதலமைச்சரின் ட்விட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டதா?!!