இந்தியா

ராஜீவ் காந்தி இடத்திற்கே ராகுலும் அனுப்பப்படுவார்...ராகுலுக்கு வந்த மிரட்டல் கடிதம்...அனுப்பியது யார்?!

Malaimurasu Seithigal TV

இந்திய ஒற்றுமை பயணத்தின் தொடர்ச்சியாக நவம்பர் 23 அன்று ராகுல் காந்தி மத்திய பிரதேசத்திற்கு செல்லவுள்ளார்.  ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தை அடைந்தால் மாநுஒலம் முழுவதும் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் கடிதம் இந்தூர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளது.

இந்திய ஒற்றுமை பயணம்:

காங்கிரஸ் கட்சியி மூத்த தலைவரான ராகுல் காந்தி 150 நாள் பயணமாக இந்தியா முழுவதும் இந்திய மக்களை ஒருங்கிணைக்கும் விதமாக இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.  தற்போது மகாராஷ்டிராவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் நவம்பர் 23 அன்று மத்திய பிரதேசம் செல்லவுள்ளார்.

மிரட்டல் கடிதம்:

மத்திய பிரதேசத்திற்கு ராகுல் சென்றடைய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்தூர் காவல் நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.  அது குறித்த விசாரணையை காவல் துறையினர் தொடங்கியுள்ளனர்.

கடிதத்தில் இருந்தது என்ன?:

ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தில் நுழையும் போது மாநிலம் முழுவதும் வெடிகுண்டு வெடிக்கும்.  சீக்கிய கலவரத்திற்கு காரணமான கமல்நாத்தும் சுடப்படுவார்.  ராஜீவ் காந்தியின் இடத்திற்கு ராகுலும் அனுப்பப்படுவார்.  இது வெறும் மிரட்டல் அல்ல.  ராகுல் மத்திய பிரதேசத்திற்குள் இது நிச்சயம் நடக்கும் என எழுதப்பட்டுள்ளது.

எழுதியவர் யார்?:

இக்கடிதத்தில் அனுப்பியவர் என ரத்லாமின் தொகுதியின் பாஜக எம்எல்ஏ சேத்தன் காஷ்யப் பெயர் எழுதப்பட்டுள்ளது.  முகவரியில் நிவாஸ்-ஸ்டேஷன் ரோடு ரத்லம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் இந்த கடிதம் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதுடன் அதில் அஞ்சல் துறையின் முத்திரையும் இணைக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கருத்து:

ராகுல் காந்திக்கு வந்த மிரட்டல் கடிதம் குறித்து காங்கிரஸ் கட்சியின் அருண் யாதவ் ட்வீட் செய்துள்ளார்.  இதைக் குறித்து காங்கிரஸ் கட்சி பயப்படவில்லை என்று கூறியுள்ளார்.  நாட்டின் ஒற்றுமை, நல்லெண்ணம் மற்றும் சகோதரத்துவத்தை ஒன்றிணைக்கும் வகையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

நாட்டை உடைக்க முயலும் சக்திகள் மிரட்டல் கடிதங்கள் மூலம் சூழலை மாற்ற முயல்கின்றன.  ஆனால் காங்கிரஸ் இதற்கு எல்லாம் அஞ்சாது.  மிரட்டல் கடிதம் அனுப்பியவர்கள் மீது காவல்துறை-நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

-நப்பசலையார்