வட மாநிலங்களில் மட்டும் மக்கள்தொகை அதிகரிக்க காரணம் என்ன?!!!

வட மாநிலங்களில் மட்டும் மக்கள்தொகை அதிகரிக்க காரணம் என்ன?!!!
Published on
Updated on
1 min read

கடந்த 12 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 8 பில்லியனை அடைந்துள்ளது.  இதற்கு இந்தியா முக்கியமான காரணமாக உள்ளது என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் அறிவித்துள்ளது.

1 பில்லியனில் 17%:

இந்தியா 2010-2021 இடைப்பட்ட காலக்கட்டத்தில் 17 கோடி மக்கள் தொகையை உலக மக்கள் தொகையுடன் இணைத்துள்ளது.  அதாவது அதிகரித்துள்ள 1 பில்லியன் மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கீடு 17 சதவீதம் என கூறியுள்ளது ஐ.நா.

பீகார் மற்றும் உ.பி.யின் பங்கீடு:

கங்கை சமவெளியில் அமைந்துள்ள பீகார் மற்றும் உத்திர பிரதேசம் இந்தியாவிலேயே அதிக அளவிலான மக்கள் தொகையை கொண்ட மாநிலங்கள்.

இந்த இரண்டு மாநிலங்களின் 35.4 கோடி மக்கள்தொகையானது உலகின் மூன்றாவது பெரிய நாடான அமெரிக்காவின் மக்கள் தொகைக்கு இணையானது என ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது.

2011ல் உத்திர பிரதேசத்தில் 19.98 கோடியாக இருந்த மக்கள் தொகை 2021ல் 23.09 கோடியாக உயர்ந்துள்ளது.  பீகாரில் 2011ல் 10.4 கோடியாக இருந்த மக்கள் தொகை 12.3 கோடியாக அதிகரித்துள்ளது.

தென் மாநிலங்களில் அதிகரிக்காத மக்கள்தொகை:

தென் மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களை இணைத்தும் உலக அளவில் அதிகரித்துள்ள 1 பில்லியனில் 2.38 சதவீதம் கூட வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.

வடமாநிலங்கள் vs தென்மாநிலங்கள்:

வட மாநிலங்களோடு ஒப்பிடும் போது மக்கள் எண்ணிக்கை தென் மாநிலங்களில் குறைவாகவே உள்ளது.  கல்வி வளர்ச்சியே இத்தகைய மாற்றத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.  தென் மாநிலங்களின் சிறந்த திட்டங்களும் அரசின் செயல்பாடுகளும் இதற்கு முக்கிய காரணமாகும்.  

அதிகரிக்கும் மக்கள் தொகை நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்று என்றாலும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் அதிக அளவில் சிக்கலகளை ஏற்படுத்துகிறது.  வட மாநில அரசுகள் இவற்றை கருத்தில் கொண்டு சிறப்பான திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்துவதோடு மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com