பாரதிய ஜனதா ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேகாலயா மாநிலத்தின் துரா பகுதியில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, நல்ல ஆட்சியை விரும்பும் மக்கள், ஒரு குடும்பத்தின் தலைமையிலான ஆட்சியை விரும்பவில்லை என்றார்.
இதையும் படிக்க : ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் தீர்மானத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது - ஓபிஎஸ்!
மேகாலயாவில் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் புதிதாக மருத்துவமனைகள் கொண்டு வரப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும், பாஜ.க. அரசில் இலவசமாக தடுப்பூசிகள் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறிய பிரதமர், நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் தாமரை மலரும் என நம்பிக்கை தெரிவித்தார்.