ஆம் ஆத்மி தலைமையிலான நிர்வாகத்தால் 1000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மது வணிகங்கள் கலால் கொள்கையை வகுப்பதில் முறைகேடுகள் நடந்ததாக ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டு டெல்லி துணை முதலமைச்சர் மற்றும் 14 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் மீண்டும் டெல்லி அரசாங்கத்திற்கு பேருந்து மூலமாக புதிய சிக்கல் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு பேருந்து கொள்முதலில் ஊழல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து அப்போதைய துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். 1000 பேருந்துகளுக்கு ரூ.890 கோடியும், பராமரிப்புக்காக ரூ.350 கோடியும் ஒதுக்கப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. பின்னர் டெல்லி அரசாங்கம் கொள்முதலை கைவிட்டது.
தற்போது அந்த ஊழல் குற்றசாட்டு மீண்டும் கையிலெடுக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: நண்பருக்கு வாழ்த்து தெரிவித்த மோடி......