ஜப்பானில் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. இதனிடையில் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இப்போது அரசாங்க இல்லத்தில் ஓய்வு பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு லேசான காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
65 வயதான ஜப்பான் பிரதமர் ஒரு வாரம் கோடை விடுமுறைக்கு பின்னர் திங்களன்று பணியை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் ட்விட்டர் பதிவு:
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கோவிட்-19லிருந்து விரைவாக குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ”என் நண்பரும் ஜப்பான் பிரதமருமான ஃபுமியோ கிஷிடா கொரோனா தொற்றிலிருந்து விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
ஜப்பானில் கொரோனா தொற்று:
ஜப்பானில் 2,53,265 கொரோனா தொற்று பதிவாகியுள்ளன. புதிதாக 25,277 கொரோனா தொற்று பதிவாகியுள்ளது என ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.