காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜியை விமர்சித்துள்ளார்.
ஒரே யோசனை:
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி மீது காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடும் விமர்சனம் செய்துள்ளார். அவர்கள் இருவரையும் ஒரே யோசனையின் உருவம் என்று அவர் வர்ணித்துள்ளார். மமதா பானர்ஜிக்கும் மோடி ஜிக்கும் இடையே புரிந்துணர்வு இருப்பதாக கூறிய ஆதிர் மோடிக்கு கோபம் வரும் வகையில் மமதாவால் எதையும் செய்ய முடியாது எனக் கூறியுள்ளார். மேலும் ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்று மோடி ஜி கூறும்போது, வங்காளத்தில் இருந்து காங்கிரசை அகற்ற வேண்டும் என்று மம்தாவும் கூறுகிறார் எனவும் பலர் இந்தியா ஒற்றுமை பயணத்தை பாராட்டும் வேளையில் இருவரும் ஒன்றாக அதை எதிர்க்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.
விசாரணை குறையும்:
தொடர்ந்து பேசிய ஆதிர் “இதற்கு முன்பே மோடிக்கும் மமதாவுக்கும் இடையே அரசியல் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் மமதா பானர்ஜியும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். ” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அமித் ஷா மற்றும் முதலமைச்சர் மமதா பானர்ஜி இடையேயான சமீபத்திய சந்திப்பை குறிப்பிட்ட சவுத்ரி, ”மமதா பானர்ஜியுடன் ஒப்பந்தம் செய்ய பிரதமர் மோடி விரைவில் மாநிலத்திற்கு வருவதாக கூறியுள்ளார். பிரதமர் மோடியின் வருகைக்குப் பிறகு பானர்ஜிக்கு எதிரான மத்திய அமைப்புகளின் விசாரணை குறையும்.”எனவும் கூறியுள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ரூ.230 கோடி மதிப்பீட்டில் கிங்ஸ் பன்னோக்கு மருத்துவமனை...நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்!