ரூ.230 கோடி மதிப்பீட்டில் கிங்ஸ் பன்னோக்கு மருத்துவமனை...நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்!

ரூ.230 கோடி மதிப்பீட்டில் கிங்ஸ் பன்னோக்கு மருத்துவமனை...நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்!
Published on
Updated on
1 min read

கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தின் கட்டுமானப் பணிகள், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், புதிய சாலை அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் : 

சென்னை ஆதம்பாக்கத்தில் ஆயிரத்து 420 மீட்டர் நீளத்திற்கு,16 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். இதே போல், மணப்பாக்கம், நேதாஜி சாலை, ஐந்து பர்லாங் சாலை உள்ளிட்ட 6 சாலைகளில் நடைபெற்று வரும் பணிகளையும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வரைபடம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிகாரிகள் விளக்கமளித்த நிலையில், அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மருத்துவமனை கட்டுமானப் பணிகள் :

முன்னதாக, கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் நடைபெற்று வரும், 230 கோடி ரூபாய் மதிப்பிலான பன்னோக்கு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர், அதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com