ஜி-20 உச்சிமாநாட்டிற்கான தயாரிப்பு செயல்முறை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி அனைத்து கட்சி கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியும் அவரது டெல்லி பயணத்தின் போது கூட்டத்தில் கலந்து கொண்டார்.
நாட்டுக்கு எதிரானது:
ஜி-20 லோகோவில் தாமரையைப் பயன்படுத்தியதை ஒரு பிரச்சினையாக மாற்றவில்லை என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா, இந்தப் பிரச்னையை பேசினால், அது நாட்டுக்கு நல்ல அறிகுறியாக இருக்காது என்பதால், இந்தப் பிரச்னையை எழுப்புவதைத் தவிர்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் சின்னமா?:
அதே நேரத்தில், ஜி20 உச்சி மாநாட்டின் சின்னத்தில் தாமரையை தவிர வேறு எந்த தேசிய சின்னத்தையும் மத்திய அரசு தேர்வு செய்திருக்கலாம். ஏனெனில் தாமரை ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் சின்னமாக உள்ளது என்று முதல்வர் மமதா கூறியுள்ளார். டெல்லி புறப்படுவதற்கு முன் கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா, ”ஜி 20 மாநாடு நமது நாட்டு கலாச்சாரத்துடன் தொடர்புடையது. எனவே அதை பிரச்சினையாக்குவது ஏற்புடையது அல்ல” என்று தெரிவித்துள்ளார். மேலும் ”இந்த விவகாரம் நாட்டிற்கு வெளியே பேசப்பட்டால் அது நாட்டின் நற்பெயருக்கும் நல்லதல்ல” என்றும் கூறியுள்ளார்.
மேலும் தெரிந்துகொள்க: ஜி-20ல் தாமரை..தேர்தல் சின்னத்தை விளம்பரப்படுத்தும் பாஜக..முற்றும் வார்த்தை போர்..
பாஜகவின் விளக்கம்:
அதே சமயம், ஜி20 சின்னத்தில் உள்ள தாமரையை பாஜகவுக்கு சாதகமாக மத்திய அரசு பயன்படுத்தியுள்ளதாக் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்ததோடு “தாமரை மலர் நாட்டின் கலாச்சார அடையாளத்தின் ஒரு பகுதியாகும்” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ஹிமாச்சல் தேர்தல்...பாஜகவின் நம்பிக்கை வெற்றி பெறுமா? ராகுலின் நடைபயணம் கைகொடுக்குமா?