ஹிமாச்சல் தேர்தல்...பாஜகவின் நம்பிக்கை வெற்றி பெறுமா? ராகுலின் நடைபயணம் கைகொடுக்குமா?

ஹிமாச்சல் தேர்தல்...பாஜகவின் நம்பிக்கை வெற்றி பெறுமா? ராகுலின் நடைபயணம் கைகொடுக்குமா?
Published on
Updated on
1 min read

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.  அவரது பயணத்திற்கு பொதுமக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது.  ஆனால் ராகுல் காந்தியின் அரசியல் கோட்பாட்டை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

காங்கிரஸ் நம்பிக்கை:

தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், கருத்துக் கணிப்புகள் என்ன சொன்னாலும், ஹிமாச்சலில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பாஜக நம்பிக்கையுடன் உள்ளது.  பிரயாக்ராஜில் இருந்து ஹிமாச்சல் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பல வாரங்கள் தீவிரமாக இருந்த ஆர்வம், நம்பிக்கை இப்போது காங்கிரஸிடம் இல்லை.  தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விகளுக்கு டிசம்பர் 8 க்குப் பிறகு பார்க்கலாம் என்று கூறியுள்ளது காங்கிரஸ் தரப்பு. 

பாஜக நம்பிக்கை:

ஆனால் பாஜகவின் இந்த எதிர்பார்ப்பு அப்படிப்பட்டதல்ல.  இதற்குப் பின்னால் அவர்களுடைய பெரிய உழைப்பு இருக்கிறது.  இமாச்சலில் ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் இருக்காது என பாஜக தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  இந்த இடைவெளியை சுயேச்சைகளின் உதவியுடன் எளிதாக நிரப்புவோம் என பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.  

வெற்றி யாருக்கு?:

ஹிமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் இந்த மாதம் 8ம் தேதி வெளியாகவுள்ளது.  அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வந்தாலும் காங்கிரஸ்ஸிற்கான ஆதரவு அதிகரித்ததாகவே இருந்தது.  இதற்கு முக்கிய காரணம் ராகுலின் இந்திய ஒற்றுமை பயணமே எனக் கூறப்படுகிறது.  இந்நிலையில் கட்சியிடம் இது குறித்து கேட்டதற்கு காங்கிரஸ் நம்பிக்கை இழந்து இருப்பதாகவே இருக்கிறது.  

ஆனால் பாஜக அதனது வெற்றியில் மிக உறுதியாக இருப்பது தெளிவாக தெரிகிறது.  தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாஜகவின் நம்பிக்கை வெற்றி பெறுமா அல்லது ராகுலின் நடைபயணம் காங்கிரஸ்ஸிற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்துமா என்பது தெரிய வரும்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com