இந்தியா

95 வயதை அடைந்த அத்வானி....வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்!!!

Malaimurasu Seithigal TV

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானியின் பிறந்தநாள் இன்று.  பிரதமர் நரேந்திர மோடி அவரது இல்லத்துக்கு வந்து வாழ்த்து தெரிவித்தார்.

பாஜகவின் முக்கிய நிறுவனர் அத்வானி :

லால் கிருஷ்ண அத்வானி நவம்பர் 8, 1927 அன்று கராச்சியில் பிறந்தார். அவருக்கு இன்று வயது 95.  பாஜகவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.  நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, துணைப் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.  

பலமுறை பாஜகவின் தேசிய தலைவராக இருந்துள்ளார் அத்வானி.  எல்.கே. அத்வானி சில சமயங்களில் கட்சியின் தலைவர் என்றும், சில சமயம் இரும்பு மனிதர் என்றும், சில சமயங்களில் கட்சியின் உண்மையான முகம் என்றும் அழைக்கப்பட்டார்.

வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்:

பிரதமர் நரேந்திர மோடி அத்வானியின் இல்லத்துக்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அவரது இல்லத்துக்குச் சென்று வாழ்த்து கூறியுள்ளார். இரு தலைவர்களும் அத்வானியை சந்தித்த படங்கள் மற்றும் வீடியோக்களும் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. 

எல்.கே.அத்வானிக்கு பிரதமர் மோடி மிகுந்த உற்சாகத்துடன் வாழ்த்து தெரிவிப்பதை வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது.  அத்வானியை சந்தித்த பிரதமர் மோடி அவருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து கூறினார்.  இதையடுத்து இரு தலைவர்களும் சிறிது நேரம் பேசிக் கொண்டனர்.

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அத்வானியை நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ஷா:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார் . ”மதிப்பிற்குரிய எல்.கே. அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அத்வானி ஜி, ஒருபுறம், தனது தொடர்ச்சியான கடின உழைப்பால் நாடு முழுவதும் அமைப்பை வலுப்படுத்தினார், மறுபுறம், அரசாங்கத்தில் இருந்தபோது, ​​நாட்டின் வளர்ச்சிக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்தார். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்