இந்திய மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அளித்த சீனா அரசாங்கம்!!!

இந்திய மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்குமாறு சீனா அரசாங்கம் அறிவுறுத்தல்.
இந்திய மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அளித்த சீனா அரசாங்கம்!!!
Published on
Updated on
1 min read

இந்திய மாணவர்களுக்கு சீனப் பல்கலைக்கழகங்களால் தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சீன செய்தித் தொடர்பாளர் பதிலளித்துள்ளார்.  

கொரோனாவில் பாதிக்கப்பட்ட கல்வி:

இந்திய மாணவர்கள் சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்து வந்தனர்.  ஆனால் கொரோனா தொற்று காரணமாக அங்கிருந்து இந்தியா திரும்பினர்.  அதன்பிறகு, சீனா அரசாங்கம்  விசா வழங்காததால் கல்வியை தொடர முடியாமல் அவர்கள் சிரமப்பட்டனர்.

இதுவரை வழங்கப்படாத என்ஓசி:

சீனாவில் உள்ள குறைந்தபட்சம் 40 பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களுக்கு இன்னும் என்ஓசி வழங்கவில்லை.  சீன விசா விண்ணப்பத்துடன் இந்த NOC வழங்கப்பட வேண்டும்.  இதனால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்காலம் பாழாகி வருகிறது.  

மாணவர்களின் கடிதங்களுக்கும் இந்த பல்கலைக்கழகங்கள் பதிலளிக்கவில்லை. சில பல்கலைக்கழகங்கள், சீனாவின் மாகாண அரசாங்கங்கள் NOC களை வழங்குவதைத் தடுக்கின்றன என்று கூறியுள்ளன.

பதிலளித்த சீனா அரசாங்கம்:

நாட்டில் அமல்படுத்தப்பட்ட கோவிட் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்திய மாணவர்களுக்கு சீனா தற்போது பெரும் நிவாரணம் அளித்துள்ளது.  சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் பெய்ஜிங்கில் வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை தெரிவித்தார். 

”எனக்குத் தெரிந்தவரை, கோவிட் -19 கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான போக்குவரத்து தற்போது அதிகரித்துள்ளது.  குறைந்தது 1,300 இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

மாணவர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்:

வெளிநாட்டு மாணவர்கள் நாட்டில் படிப்பை மீண்டும் தொடர சீன அரசாங்கம் வரவேற்பதாக சீன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

மேலும் அவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன எனவும் சீனாவில் பட்டப்படிப்பைத் தொடர விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் நாடுகளில் அமைந்துள்ள சீனத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகத்தில் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் கூறினார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com