மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ஜம்மு காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்ததில் இருந்து தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
மேலும் தெரிந்துகொள்க: நேருவின் ஐந்து தவறுகளால் 70 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட இந்தியா...!!! ஒரே திட்டத்தால் தவறுகளை சரி செய்தாரா மோடி??!!
ஜம்மு காஷ்மீர் இணைப்பு விவகாரத்தில் ஹரி சிங்கின் இணைப்பு கோரிக்கையை நேரு நிராகரித்து, சிறப்பு அந்தஸ்து வழங்கிய நேருவின் முட்டாள்தனத்திற்கு இந்தியா இன்னும் விலை கொடுத்து வருவதாக சமீபத்தில் மத்திய சட்ட மற்றும் நீதித் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்,” இதுகுறித்து பாஜக கொள்கைவாதி ஒருவரிடம் பேசினேன். அவர் பின்வருமாறு பதிலளித்தார்.” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
”நேருவை இழிவுப்படுத்துவது ஒன்றாக இருந்தாலும் ஆனால் ஹரிசிங்கை நேர்மையான மற்றும் கருணையுள்ள ஹீரோவாக முன்னிறுத்துவது முட்டாள்தனம்” எனப் பதிலளித்திருந்தார் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.