உலகில் பல தனித்துவமான இடங்கள் உள்ளன, அதைப் பற்றி சிலருக்கு மட்டுமே தெரியும். உலகின் பணக்கார கிராமம் எங்கு உள்ளது எனத் தெரியுமா? உலகின் பணக்கார கிராமம் இந்தியாவில் உள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளதல்லவா!
குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ளது இந்த கிராமம். அதன் பெயர் மாதபர். இந்த கிராமத்திற்கென தனித்துவமான கதைகள் உள்ளன. அதைப் பற்றி தெரிந்துகொண்டால் நீங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.
இந்தியாவின் இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலான மக்களை விட பணக்காரர்கள். இதன் காரணமாக, அதன் பெயர் உலகின் பணக்கார கிராமங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமத்தில் 7600 வீடுகளும், 17 வங்கிகளும் இருக்கிறது. மாதபர் கிராம மக்களின் வங்கிகளில் சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் மாதபர் உட்பட மொத்தம் பதினெட்டு கிராமங்கள் உள்ளன. கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரின் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிராமத்தில் வங்கிகள் மற்றும் மருத்துவமனைகள், ஏரிகள், பூங்காக்கள் மற்றும் கோவில்கள் உள்ளன. இங்கு மாட்டு தொழுவமும் கட்டப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கையின்படி, இந்த கிராமத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் லண்டனில் வசிக்கின்றனர். 1968 ஆம் ஆண்டு லண்டனில் மாதபர் கிராம சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுதவிர கிராம அலுவலகமும் திறக்கப்பட்டது. இந்த அலுவலகம் திறக்கப்பட்டதன் நோக்கம், லண்டனில் வசிக்கும் மதாபர் கிராம மக்கள் அனைவரும் ஏதாவது ஒரு சமூகத் திட்டத்தை முன்வைத்து சந்திக்க வேண்டும் என்பதற்காகவே.
இக்கிராமத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் சிறந்த வசதிகள் உள்ளன. இந்த கிராமத்தின் செழுமைக்குக் காரணம், பெரும்பாலான மக்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பதுதான். சிலர் பல வருடங்களாக வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு இங்கு வந்து தொழில் ஆரம்பித்து இப்போது கைநிறைய சம்பாதித்து வசதியாக வாழ்கிறார்கள்.
1990 களில் தொழில்நுட்பத்தின் வருகைக்குப் பிறகு, மாதபர் கிராமம் நாட்டிலேயே மிகவும் ஹைடெக் கிராமமாக மாறியது. ஊர் மக்கள் அனைவரின் சொத்து விவரங்களையும் வெளியே எடுத்தால் உலகின் பணக்கார கிராமங்களில் மாதப்பர் இடம் பெறுகிறது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 92,000 நபர்களின் பெயரில் வங்கிகளில் 5000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.