இந்தியா

”இந்தியாவின் இரும்பு மனிதர் இனி இல்லை”... உலகிலிருந்து விடைபெற்றார் ஜாம்ஷெட் ஜே. இராணி!!!

Malaimurasu Seithigal TV

நாட்டின் எஃகு மனிதர் என்று அழைக்கப்படும் ஜாம்ஷெட் ஜெ இரானி உலகிலிருந்து விடைபெற்றார்.  அவர் நேற்று இரவு ஜாம்ஷெட்பூரில் காலமானார். 

டாடா ஸ்டீல் அறிக்கை:

டாடா ஸ்டீல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியாவின் இரும்பு மனிதர் இனி இல்லை.” எனத் தெரிவித்துள்ளது.  பத்ம விபூஷன் டாக்டர் ஜாம்ஷெட் ஜே. இரானியின் மறைவு குறித்து டாடா குழுமம் மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளது.

அவர் அக்டோபர் 31 அன்று இரவு 10 மணியளவில் ஜாம்ஷெட்பூரில் இறந்துள்ளார்.  டாடா ஸ்டீல் குழுமத்தில் இருந்து இரானி ஜூன் 2011 இல் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜாம்ஷெட் ஜே. இரானி:

ஜூன் 2, 1936 இல், ஜி.ஜி. இரானி மற்றும் குர்ஷித் இரானியின் தம்பதியினருக்கு பிறந்த ஜாம்ஷெட், 1956 இல் நாக்பூரில் உள்ள அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சியும் ​​1958 இல் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சியும் முடித்தார்.

பின்னர் அவர் இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்று 1960 இல் முதுகலைப் படிப்பை முடித்தார்.  இது தவிர 1963 இல் முனைவர் பட்டமும் பெற்றார். 

டாடா ஸ்டீல் நிறுவனம்:

ஜாம்ஷெட் இரானி 1963 இல் பிரிட்டிஷ் இரும்பு மற்றும் எஃகு ஆராய்ச்சி சங்கத்தில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவரது கனவு எப்போதும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதாகவே இருந்தது. அவர் 1968 இல் இந்தியா திரும்பி டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்தை நிறுவினார். அது இன்று டாடா ஸ்டீல் என்று அழைக்கப்படுகிறது. 

-நப்பசலையார்