இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் உணவகத்தில் தீ விபத்தா?!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் உணவகத்தில் தீ விபத்தா?!!
Published on: 
Updated on: 
1 min read

புனேவில் உள்ள லுல்லா நகரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  புனேவின் லுல்லா நகர் பகுதியில் அமைந்துள்ள மார்வெல் விஸ்டா கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

புனேவில் உள்ள லுல்லா நகர் சௌக்கில் உள்ள மார்வெல் விஸ்டா கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தன. மேலும், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜாகீர் கான் உணவகம்:

இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானின் உணவகமும் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வரை அவரது உணவகத்தில் தீ எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை குறித்த தகவல் வெளியாகவில்லை.  ஜாகீர் கானும் இது குறித்த எந்த தகவலும் அளிக்கவில்லை.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com