இந்தியா

ப்ளூ டிக் குறித்த பயனாளரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க்..!!!

பிரீமியம் சேவை இந்தியாவில் இன்னும் ஒரு மாதத்திற்குள் தொடங்கப்படும்.

Malaimurasu Seithigal TV

ட்விட்டரில் ப்ளூ டிக்கிற்கு மாதத்திற்கு ரூ.1600 செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து, இந்தியாவில் இந்த சேவை  எப்போது தொடங்கும் என்பதை தெரிந்து கொள்வதில் அனைவரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.  இந்த சூழ்நிலையில் எலோன் மஸ்க் அவரே பதில் அளித்துள்ளார். 

ஒரு ட்விட்டர் பயனாளரின் கேள்விக்கு, ஒரு மாதத்திற்குள் பிரீமியம் சேவை இந்தியாவில் தொடங்கப்படும் என மஸ்க் பதிலளித்துள்ளார். 

தற்போதைய ட்விட்டர் ப்ளூ டிக்கானது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஐபோன் பயனாளர்களுக்கு மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.

பணம் செலுத்திய பிறகு உங்களுக்கு என்ன கிடைக்கும்?:

ப்ளூ டிக்கிற்கு பணம் செலுத்துபவர்களுக்கு மேலும் சில புதிய அம்சங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.  ப்ளூ டிக் சந்தாவின் கீழ், பயனாளர்கள் நீண்ட வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை பதிவிட முடியும். ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்கள் சாதாரண பயனாளர்களுடன் ஒப்பிடும்போது விளம்பரங்கள் குறைவாகவே இருக்கும்.

கூடுதலாக, ப்ளூ டிக் சந்தாதாரர்கள் கட்டணக் கட்டுரைகளையும் இலவசமாகப் படிக்கலாம். அதே நேரத்தில், பயனாளர்கள் ட்வீட்களைத் திருத்தும் வசதி மற்றும் டவுன்லோட் செய்யும் வசதி போன்ற அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

-நப்பசலையார்