நேரு குறித்த உண்மையை பாஜக திரித்து கூறுகிறதா?! பாஜக நேருவை தாக்கி பேச காரணமென்ன?!!

நேரு குறித்த உண்மையை பாஜக திரித்து கூறுகிறதா?! பாஜக நேருவை தாக்கி பேச காரணமென்ன?!!
Published on
Updated on
2 min read

”தவாங் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறுவதை நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு விரும்பவில்லை” என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு.

கிரண் ரிஜ்ஜூ தரப்பு வாதம்:

இந்திய வீரர்கள் போரின் மூலம் 1951ல் அசாமின் தவாங்கை இந்தியாவுடன் இணைத்தனர்.  இந்தியாவின் முதல் பிரதமரான ​​நேரு அதை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அப்போதைய அசாம் கவர்னர் ஜெய்ராம் தாஸ் தௌலத் ராமை இதற்காக திட்டினார் எனவும் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.

அவரது கருத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். 

ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்:

”பிரதமர் நரேந்திர மோடியின் குழுவில் உண்மைகளை திரித்துக் கூறும் புதிய நபர் கிரண் ரிஜிஜு என்று ட்வீட் செய்துள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.  தவாங் இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதை நேரு விரும்பவில்லை என்று அவர் இப்போது கூறி வருகிறார்.  இது அப்பட்டமான பொய்.  2018 இல் பகிரப்பட்ட இரண்டு டெலிகிராம்களால் இது பொய் என்பது அம்பலமாகியுள்ளது.” எனக் கூறியுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.

மேலும் ”பிப்ரவரி 1951 இல் தவாங்கில் மூவர்ணக் கொடியை ஏற்றியது ஒரு கொள்கை முடிவு என்பதை நிராகரிக்க முடியாதது.  இது பலருடைய ஆலோசனைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.  கொள்கை முடிவுக்கான கால நேரத்தை கணிப்பதை நேரு ராணுவ வீரர்களிடம் விட்டு விட்டார்.” எனவும் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

370வது பிரிவு:

இதற்கு முன்னர் கிரண் ரிஜ்ஜூ காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதை விரும்பவில்லை எனவும் பிரிவு 370 உருவாகவும் முக்கிய காரணமாக இருந்தார் எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com