திரும்ப பெறப்பட்ட ரயில்வே பிளாட்ஃபார்ம் கட்டண உயர்வு...!!!

திரும்ப பெறப்பட்ட ரயில்வே பிளாட்ஃபார்ம் கட்டண உயர்வு...!!!

பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.  எனவே, பயணிகள் தவிர மற்ற ரயில் நிலையத்திற்கு கூடுதல் கூட்டம் வருவதை தடுக்க நடைமேடை  கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தது ரயில்வே.

அதிகரிக்கப்பட்ட கட்டணம்:

பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பது சாதாரணமனதே.  எனவே, பயணிகள் தவிர ரயில் நிலையத்திற்கு கூடுதல் கூட்டம் வருவதை தடுக்க நடைமேடை கட்டணம் உயர்த்துவதாக முடிவு செய்யப்பட்டது.  இந்த கட்டணம் ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டு ஐம்பது ரூபாயாக உயர்த்தப்பட்டது.  தற்போது நிவாரணம் அளித்து இந்த முடிவை ரயில்வே திரும்ப பெற்றுள்ளது.  

திரும்ப பெறப்பட்ட கட்டணம்:

ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தை உயர்த்தும் முடிவை திரும்பப் பெற்றுள்ளது ரயில்வே நிர்வாகம். மேலும், நடைமேடை டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமை கோட்ட ரயில்வே மேலாளரிடமிருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது.  திருவிழாக் காலங்களில் பல நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் பத்து ரூபாயிலிருந்து ஐம்பதாக உயர்த்தப்பட்டது. அப்போது இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:     ”முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டேவைப் போல் என்னையும் கொல்ல மோடியும் அமித்ஷாவும் திட்டமிடவில்லை என நம்புகிறேன்” சுப்பிரமணியன் சுவாமி கூற காரணம் என்ன?! யார் அந்த ஹரேன் பாண்டியா?!!