டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுபடுத்தவும் மரக்கன்றுகளை எரிக்க முழுத் தடை விதிக்கவும் அரசுக்கு கடுமையான உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு.
இந்தியாவின் தலைநகரான டெல்லி கடந்த சில ஆண்டுகளாக கடுமையான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனைக் கட்டுபடுத்த பல்வேறு முயற்சிகளை டெல்லி அரசாங்கம் செய்து வருகிறது.
பஞ்சாப், உத்திரப் பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களில் மரங்களை எரிப்பதாலேயே காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது என அந்த பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால் அந்த மாநிலங்களில் உள்ள விவசாயிகள் அவர்களது நிலங்களில் மரங்களை எரிப்பதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களை வரவழைத்து, மரங்கள் எரிக்கப்பட்டால் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது .
வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி யு யு லலித் தலைமையிலான அமர்வு பஞ்சாப்-உ.பி.யின் ஒவ்வொரு விவசாயிக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா? எனவும் தடை உத்தரவு இதற்கு உதவுமா? என்றும் மனுதாரரிடம் கேள்வியெழுப்பியது.
அதனோடு புகைமூட்டம், காசு மாசுபாடு, மரங்கள் எரிப்பு நீதித்துறை வரம்பிற்குள் வருமா எனவும் கேள்வியெழுப்பி மனுவை தள்ளுபடி செய்தது.