இந்தியா

குஜராத்தில் கிரிமினல் வழக்கு குற்றவாளிகள் அமைச்சர்களா பொறுப்பேற்றுள்ளனரா? அறிக்கை தெரிவிப்பதென்ன?!!

Malaimurasu Seithigal TV

முதலமைச்சர் பூபேந்திர படேல் உட்பட 16 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் அல்லது ரூ.1 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் என அறிக்கை தெரிவிக்கிறது.

குஜராத்தில் புதிதாக அமைந்த பாஜக அரசின் 17 அமைச்சர்களில் 4 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.  முதலமைச்சர் பூபேந்திர படேல் உட்பட 16 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் அல்லது ரூ. 1 கோடிக்கு மேற்பட்ட சொத்துக்களை வைத்திருக்கிறார்கள் என்று தேர்தல் சீர்திருத்தங்களுக்காக செயல்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்க அறிக்கை கூறுகிறது.

தகவல்களின்படி, மீன்பிடி மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி மீது IPC பிரிவு 420 இன் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவருடன் மற்ற மூன்று அமைச்சர்கள் ஹர்ஷ் ஷாங்வி, ஹிருஷிகேஷ் படேல் மற்றும் ராகவ்ஜி படேல் மீது பிரிவு 188ன் கீழ் பொது ஊழியர்களின் உத்தரவை மீறியதாக சிறிய குற்றச்சாட்டுகள் மற்றும் ஐபிசி பிரிவு 500 இன் கீழ் அவதூறு வழக்குகளும் உள்ளன. 

-நப்பசலையார்