கடினமான காலங்களில் கலைஞர்களுக்கு நிதி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதில் அமைச்சகம் பங்கு வகிக்க வேண்டும்.
கலைஞர்களுக்கான ஓய்வூதியத் தொகையை மரியாதைக்குரியதாக உயர்த்த வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்திருந்தது. மேலும் இந்த கடினமான காலங்களில் கலைஞர்களுக்கு நிதி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதில் அமைச்சகம் பங்கு வகிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சகம் இந்தத் தகவலைத் வெளியிட்டுள்ளது. ஆனால் இதற்கான உத்தரவு இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகையை 4,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாக அதிகரிக்க கலாச்சார அமைச்சகம் தீர்மானம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இந்த அதிகரிப்பில் திருப்தி அடையவில்லை என்று கூறியுள்ளது.
-நப்பசலையார்