அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த கார்கே...காரணம் என்ன?!!

அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த கார்கே...காரணம் என்ன?!!
Published on
Updated on
1 min read

இந்திய-சீனா ராணுவ வீரர்களுக்கு இடையேயான தவாங் மோதல் விவகாரம் நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தியது.  இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக கடுமையான கேள்விகளை எழுப்பின. 

எதிர்க்கட்சிகள் கூட்டம்:

காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களைவியின் எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார்.  நடப்பு குளிர்கால கூட்டத்தொடருக்கான உத்திகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.  இந்த கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு விரும்புவதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுந்த பதிலடி:

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இந்திய-சீனா ராணுவ வீரர்களுக்கு இடையேயான தவாங் மோதல் விவகாரம் ஆதிக்கம் செலுத்தியது.  இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக கடுமையான கேள்விகளை எழுப்பின.  இந்தியா-சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசு சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டதோடு தற்போதைய நிலையை மாற்ற சீனப் படைகளின் முயற்சிகளுக்கு இந்தியப் படைகள் தகுந்த பதிலடி கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com