திருப்பதி பிரம்மோற்சவம் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான இன்று காலை உற்சவ மூர்த்தியான மலையப்பர் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகனத்தில் தொடங்கிய வாகன சேவை, தொடர்ந்து காலை, இரவு என இரு வேளைகளிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 7-ம் நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நான்கு மாட வீதிகளிலும் உலா வந்த சூரிய நாராயணரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வாகன சேவையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.